கண்ணீர் துளிகளில் என் பயணம்
வாழ்வதற்காக ஒவ்வொரு
நிமிடமும்
செத்து செத்து பிழைக்கிறேன்
போராட்டமே
என் வாழ்க்கையாகி
போனதால்
உண்மையில்
என்றோ ஒரு நாள் சாவதற்கு
ஒவ்வொரு மணி துளியும்
போராடி
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
பிறப்பு ஒன்று எடுத்தேன்
சாவதற்காகவே ..
என் முடிவு வருமுன்னே
வாழ்ந்து விட
வேண்டுமென்றெண்ணி ..
ஆயுதம் ஏந்தி விட்டேன்
போர்க்களமாக எண்ணி ..
வெற்றி வருமோ
தோல்வி வருமோ
நானறியேன் ..
தொடருகிறேன் .....
என் கண்ணீர் பயணத்தோடு ..