கண்ணீர்

நீரின்றி பாலம் பாலமாய்
வெடித்து கிடக்கிறது வயல்
பாவமாய் விவசாயி...

விசும்ப மறுக்கிறது
வானமும்
நீரின்றி ....

எங்கள் கண்ணில்
வரும் கண்ணீரும்
எங்கள் கன்னங்கள்
நனைக்கவே போதவில்லை
எங்கு போய் கழனிக்கு
நீர் பாய்ச்ச...

ஒன்று மட்டும் நிச்சயம்
எங்கள் கண்ணீரும் வறண்டு விடும் காலம் விரைவில் வரும்.....

எழுதியவர் : சந்தோஷ் (10-Mar-18, 7:45 pm)
Tanglish : kanneer
பார்வை : 119

மேலே