வாழிய காவேரி

வாழிய காவேரி...
******************
தானாக கிடைத்த
காலங்கள் மறைந்து
கேட்டுப் பெற்ற
பொழுதுகள் கடந்து
போராடி வெற்றியும்
கிட்டியவை தேய்ந்து
வழக்கில் வாதாடி
முழுபலன் இல்லாத
தீர்ப்பால் தீர்வடையா
நிலைதான் இன்றும்
நடந்தாய் நடக்கிறாய்
நடப்பாய் நடப்பாய்
வாழிய காவேரி !
பழனி குமார்