தவிப்பு
பார்க்கக் கூடாததை
பார்க்க வேண்டும்
என்று விதி
என்னுள்அழுத்தமாக
எழுதியிருந்தது!
எதார்ச்சையாக ஒருமழைநாளில் அவனை ஜோடியாக
பார்த்தபோது.
கலியாணக்களை
அவனுள் வளிந்திரங்கி
நுனிமூக்குவரை
கரையாமல் இருந்தது!
பார்வைகள் தடுமாறி
மனசு அழுதபோதும்,
இனி பேச ஒன்றும்
இல்லை என்றும் தெரிந்தும்
பொய்யாக சுகங்களை
விசாரித்தோம்!
விடைபெற்று செல்லும்போது
திரும்பி பார்க்ககூடாது"" என்ற
திடமாண எண்ணம்
ஒரு சிலஅடிகளில்
தவிடுபொடியானது
ஆக்கம் லவன்