நான் வேண்டுவதெல்லாம்,

இனிக்கிறது இந்தச்சிறைவாசம்.,
உன் விழிச்சிறைக்குள்
மாட்டிய கைதியாய் நான்...
நீ பேசினால் மட்டுமே அதன்
கதவுகள் திறக்கும்....,
என் மனச்சிறகு நீ தூரப்பறந்தாலும்.,
உன்னுடனே பயணிக்கிறது.,
உன் நினைவற்றால் அது
உயிரற்று வீழும்.....,
மழையற்ற வானில்
வானவில் தேடி
அமரத்துடிக்கும்
பறவையாய் நான்..,
என் ஒரு துளிக்கண்ணீரில்
உன் நினைவென்ற
ஒளி பட்டுச்சிதற
வண்ண வானவில்லாய் நீ.!
என்றும் என் வானில் மட்டும்
உன் எழிற்கோலம்..
உன் உறவில் இனி ஒரு
உலகம் காண
ஒருமுறையாவது உன்
தரிசனம் கிடைக்குமா...?
நான் வேண்டுவதெல்லாம்
வேறல்ல...அடுத்த ஏழேழ்
பிறவிக்கும் என் உயிராவதாய்
உன் சிரிப்பால் ஒரு வரம்கொடு.,
என் உயிர் உனக்காய் விடை
பெறும் உலகளவு மகிழ்வோடு.......

எழுதியவர் : sana (16-Mar-18, 4:06 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 930

மேலே