கண்ணீர் கசியும் வளங்கள்
கண்ணீர் கசியும் வளங்கள் காத்தல் இன்றி அழிவு சிறையில்//
கனி தரும் மரம் என்று பிடுங்கி
கொன்று விடுவதால்
தேனாக சொட்டும் கனி மரங்கள் //
இமை விரித்து வாழ முடியாமல்
சத்தம் இன்றி இறந்து போகின்றன//
ஆற்றில் அள்ளி பருகினால் தண்ணீர் தாகம் தீர்க்கலாம்//
ஆறு இல்லை என்றால் என்ன செய்யலாம்
ஆதியில் இயற்கை அசையாதிருந்தது அதனால்
அழுத்தம் இன்றி மானிடனும் இயல்பாய் வாழ்ந்தான்
காலப்போக்கிலே இயற்கையில் கைவைக்க
சுழன்று எழுந்த செயற்கை
பூமி எங்கும் தூசுகளை பரப்பி நிற்கின்றனவே
மானிடனும் இயற்கையை தனதென நினைத்து
வாழவிட்டால்
மானிட அழிவும் விரைவில் பிறந்துவிடும்