உயிர் தின்ற தீ

கல்விப்பணி சிறக்க
களப்பணி சென்ற கன்றுகள்
கருகி வந்ததேனோ?!

காணாப்பசியில் களைத்த காடு
உரிய நேரம் பார்தது
உடலைத் தின்றதேனோ?!

சூய்யான் பாறையும்
சொல்லலையோ?!
சோகம் நேருமுன்னு!!

கானாங்குருவியும்
கத்தலையோ?!
காடு எரியுமுன்னு!!

குரங்கிணிக் காட்டு
கொடியெல்லாம் குலுங்கி
குலுங்கி கையசைக்க
வரவேற்கிறதென்று தானே
நெனெச்சோம்!!

எரிஞ்சி தீஞ்சி தணிஞ்ச
பிறகுதானே புரிஞ்சது
எல்லாம் எச்சரித்ததென்று!!

கல்லு கெடக்கா
கறிப்பிண்டம் கெடக்கா
கண்டுபுடிக்க முடியலையே!

கூடு போன குருவி
குருவி போன கூடு
கணக்கு இன்னும் தெரியலையே!!

அனுமதி வாங்கி ஏறலைனு
அதிகாரம் சொல்லுது...
பணத்தை வாங்கிட்டுதான்
பாதம்பட்டுதுனு படிப்பாறை
சொல்லுது!!

இழவுக்கு வா என்றால் எட்டாம்
துக்கத்திற்கு வந்த கதைய
எங்க போய் சொல்ல..

எரியும் தீயைப் போல
நாக்கும் எனக்கு இல்ல
எல்லோரையும் எரித்தூத் தள்ள!!

காணல் குடிச்சி
தாகம் தணியுமா?!
கண்ணீர் தெளிச் சி
காடு அணையுமா?!

எழுதியவர் : விமுகா (18-Mar-18, 9:08 am)
சேர்த்தது : விமுகா
Tanglish : uyir thinra thee
பார்வை : 124

மேலே