காதல் முதல் கல்லறை வரை
உனக்கு நான் எனக்கு நீ
என்று முடிவு செய்தேன்..
இரு இதயங்களை
இடம் மாற்றிக் கொண்டேன்..
உன் சுவாசத்தில் கலந்தேன்..
இமைகள் மூட மறந்தேன்..
காதலில் கரைந்தேன்..!
இறுதியில் நீ என்னை விட்டு
பிரிந்து சென்றதும் உடைந்தேன்..
மதியில்லா மடையன் நான்
தூக்கத்தை விற்று காதல்
வாங்கினேன்..
வாங்கிய காதலால் காயம்
கொண்டேன்..
உன்னால் தொலைத்த
நிம்மதியை தேடுகிறேன்
இன்னும் கிடைத்தபடில்லை..
உன்னில் தொலைத்த
என் கனவுகளை தேடுகிறேன்
இன்றும் கிடைக்கவில்லை..
ஒருவேளை இனி கல்லறையில்
தான் கிடைக்குமோ...?
தேடலை தொடர்ந்து தேடுபவனாக,
❤சேக் உதுமான் ❤