காதலியின் மரணம்

காதலியே...
உன்னை காணலயே...
காலன் அழைத்தது ஏன் உனையே..!

முடியலயே...
என்னால் முடியலயே...
என் மூச்சுக்காற்றும் அழுகிறதே..!

புன்னகை வீசிய காதல்
இன்று புதைந்து கிடக்கிறதே..!
பூவாய் இருந்த மனது
இன்று புலம்பி தவிக்கிறதே..!

நிழலாய் இருந்த நிலவு
இன்று நினைவாய் மாறியாதே..!
கல்லாய் இருந்த கடவுள்
வெறும் கல்லாய் தெரிகிறதே..!

காதல் தந்த வள்ளல் இதயம்
கல்லறை உள்ளே துடிக்கிறதே..!
காலம் எனக்கு இருளாய் மாறி
கானல்நீராய் தொலைகிறதே..!

இசையை தொலைத்த புல்லாங்குழல்
இரங்கல் கீதம் இசைக்கிறதே..!
இமையை தொலைத்த கண்கள்
இரவு பகலாய் முழிக்கிறதே..!

சிறகை தந்தது நீதானே
சிறையில் என்னை அடைத்துவிட்டாய்..!
மறைந்து போனது நீதானே
மரண வலியை தந்துவிட்டாய்..!

இறந்த நீ சொர்க்கம் போவாய்
வாழும் எனக்கு நரகம்தானே..!
பிறந்த குழந்தை தாயே இழந்தால்
பிறவி என்பது வீண்தானே..!

கண்ணை இழந்த ஓவியன் கை
வண்ணம் தீட்ட முயன்றிடுமா..!
உன்னில் என்னை புதைத்த பிறகு
மண்ணில் நானும் வாழனுமா..!

உன்னில் என்னை புதைத்த பிறகு
மண்ணில் நானும் வாழனுமா..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:48 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
Tanglish : kaathaliyin maranam
பார்வை : 1225

மேலே