மனம் விரும்புதே உன்னை
தட்டி கேட்காத தகப்பன் வேண்டும்
சொன்னதை கேட்கும் மகன் வேண்டும்
எல்லாம் பேசும் காதலி வேண்டும்
எதிர்த்து பேசா மனைவி வேண்டும்
கேட்டதை கொடுக்கும் அம்மா வேண்டும்
கேட்காமல் செல்லும் மக்கள் வேண்டும்
இடித்துரைக்கா நண்பன் வேண்டும்
எதை சொன்னாலும் ஏற்கும் உறவு வேண்டும்
நேரம் கேட்கா முதலாளி வேண்டும்
உரிமை கேட்கா தொழிலாளி வேண்டும்
கேள்வி கேட்கா ஆசீரியர் வேண்டும்
சந்தேகம் கேட்கா மாணவன் வேண்டும்
அல்லி தரும் அரசன் வேண்டும்
கொள்கை கேட்கா தொண்டன் வேண்டும்
நோய் இதுவென கேட்கா நோயாளி வேண்டும்
பணமே கேட்கா மருத்துவர் வேண்டும்
கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால்
வாழ்வே வாழ்வே இனிமையென
மரணம் மரணம் மரணமிலா
வாழ்வை வாழ்வை வாழ்வை கேட்பேன் ...............................