நாஞ்சில் ஓருமைகள் 1
நாஞ்சில் ஓருமைகள்
நாலாப்பு படிச்சிற்றிருந்த எனக்கு நல்ல காச்சலு அண்ணைக்கி.
"லங்கணம் பரம ஔஷதம் "ன்னு
ஆச்சி ஏங்கிட்ட சொல்லி வெறும் வயித்துல வைத்தியசாலை கஷாயத்தை மட்டுமே குடிச்சிற்று நா உறங்கிற்றேன்.
அடுத்த வீட்டு பார்த்தியார் பாட்டா ஒரு வாரமா கெடவாட்டுல கெடக்கேரு,
சிலயப்பம் இழுக்கு , ரெண்டு நாளா பால் ஒழுக்கிற்று இருக்கா சொக்காரோ யெல்லாம்.
ராவு மணி பந்திரெண்டு தாண்டிருக்கும்.
எனக்கு சொப்பனமா நினைப்பு இல்ல ஆனா நல்ல தெரியு ஒரு பெரிய உருவம் மனுஷாளா தெரியல
தெக்க மணத்திட்டை பாறைல நிக்க மாரி இருக்கு. விருசுன்னு கால யென் தலைல வெக்க வருகு.
கூடால ஒரு சத்தம் கேக்கு "இதில்லே அங்ன பாரு கட்டில்ல"
நான் பறதியடிச்சிற்று "எம்மோ எப்போ" கூப்பாடோட முழிக்கேன்.
பார்த்தியார் பாட்டா சொக்காரோ அந்த ஆச்சி உட்பட யென்னய பாக்க வாறா.
"யேம்போ பயமாடே சொப்பனம் கண்டியா . புள்ளைக்கு திருநாறு பூசுங்கோ"ன்னு ஆளாளுக்கு என்னிய கெவனிக்கா.
நான் திரும்ப ஒறங்க தய்யார் ஆகைல பார்த்தியார் பாட்டா செத்துட்டாருன்னு அவாள் வீட்டுல ஓரியாட்டமாகு.
பித்தானாளு பாட்டாவோட துட்டிக்கி வந்த அவரு ஒடப்பிறந்தா "ஏ! எண்ணே,என்னய விட்டுற்று போயிற்றயே"
மாருல அடிச்சவா
பொசுக்குன்னு கீழ விழுந்தா உசுரயே விட்டுற்றா.