சூட்டுவேனே
ஆற்றில் நீந்தும் கெண்டை மீனை
***அன்பே உன்றன் கண்ணில் கண்டேன் !
காற்றில் வந்த உன்றன் பாட்டு
***காதில் தேனாய்ப் பாயக் கண்டேன் !
ஊற்றெ டுத்த காத லாலென்
***உள்ளம் பூத்தே ஆடக் கண்டேன் !
ஏற்றுக் கொண்டால் வான வில்லை
***எட்டிக் கொய்து சூட்டு வேனே ....!!!