கண்ணீர்விடும் காவேரி
" நதியெங்கே போகிறது
கடலைத்தேடி "- குடகில் பிறந்து
'நடந்தாள் வாழி" காவேரி என்று
புலவர் வாழ்த்துப் பாட அன்று
கடலோடு காதலித்து
சங்கமம் அடைந்துவந்தாள் காவேரி
இன்றோ பிறந்த இடத்திலேயே
சிறைப்பட்டு, கண்ணீர்விடுகிறாள்
காதலனை சென்று அடைய
முடியவில்லையே என்று