நீ
நொடிப் பொழுதில்
உன் பிம்பம்
என்னுள் ஊடுருவ
அந்த நொடியில்
மரணித்தேன்
புதிதாய் பிறந்தேன்
என்னுள் கருவாய் நீ
ஊரை மறக்க
உலகை மறக்க
என்னுள் உருவாய் நீ
அள்ளி அணைக்க
சொல்லிவிட தவிக்க
பாதுகாப்பு வளையத்துள்
அமைதியாக நீ
அமைதி இழந்து
நான்
போதுமுன் மௌனம்
கலைத்துவிடு
இல்லையெனில் நீ
என்னுள் இருந்து
மரணித்துவிடு.
நா.சே..,