எதிர் வீட்டு தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

எதிர் எதிர் வீட்டில் இருந்தும் கூட அவள் எதிரே சென்று பார்த்ததில்லை

ஒரே பள்ளியில் படித்து வந்தும் கூட ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை

முதல் நாள் பள்ளிக்கு சென்ற போது என் அம்மா அவளிடம் கூறிய வார்த்தையை நான் என்றும் மறந்ததில்லை

வாழ்க்கை என்னும் பந்தயத்தில் போட்டியிட அவள் என்றும் பயந்ததில்லை

நினைத்ததை அடைய முடியாவிட்டாலும் அவள் முயற்சி செய்ய தவறியதில்லை

சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்கவும் சந்திரன் மறைந்த பின் தூங்கவும் அவள் என்றும் மறந்ததில்லை

அதனாலே என்னவோ
கோவில் தெய்வத்தின் தரிசனம் கிடைத்த எங்கள் தெரு வாலிபர்களுக்கு இவள் தரிசனம் கிடைத்ததே இல்லை

என்னை அவள் எதிரியாய் எண்ணாவிட்டாலும் என்னை விட குறைவான மதிப்பெண் என்றும் அவள் எடுத்தது இல்லை

அவளை விட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் எடுத்திட மாட்டேனா என்று என் மனம் எண்ணாத நாள் இல்லை

பள்ளியில் குயிலாக இருந்த அவள் கல்லூரியில் குரங்காக மாறியதை கண்டு நான் திகைக்காத நாள் இல்லை


விழாக்கால நாட்களை கொண்டாட மறுத்த அவள் மனம்
கல்லூரி நாட்களை கொண்டாட மறந்ததில்லை

அப்படி கொண்டாடிய நாட்களில் அவள் எடுத்த செல்ஃபிக்கு எந்த குறையும் இல்லை

அவ்வாறு எடுக்கும் போது சிரிக்கிறேன் என்ற பெயரில் அவள் செய்யும் முகபாவனை என்னால் பார்க்க முடியவில்லை

எங்கள் பெற்றோர்கள் பல நாள் பழகி வந்தும் கூட நாங்கள் ஒரு நாள் கூட ஒன்றாக பேசியதில்லை

சில நாட்கள் பேசி வந்தும் கூட பலநாட்கள் பழகியது போன்ற நட்பை வெளிப்படுத்த அவள் என்றும் மறந்ததில்லை

வெற்றியோ தோல்வியோ
நான் எடுப்பது சிறு முயற்சியாக இருந்தாலும் கூட என்னை பாராட்டாமல் அவள் இருந்ததில்லை

என் தமிழ் ஆசிரியை பெயரை வைத்ததாலோ என்னவோ சிறு தவறுக்கும் அவள் என்னை திட்டாமல் விட்டதே இல்லை


சில நாள் பழகியதில் பலநாள் பழகியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்திய அவள் நட்பை எண்ணி நான் பெருமை படாத நாட்களே இல்லை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : மூர்த்தி.R (30-Mar-18, 10:53 am)
பார்வை : 248

மேலே