அன்பு மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து
நாவில் நீரூரும்,
தேனைப் பருகினாலும்,
கற்றை நோட்டுகளை,
கண்ணில் கண்டாலும்,
மனதை வருடும்,
கீதம் கேட்டாலும்,
நான் பெற்ற உவகையை,
அவையாவும் அளிக்குமோ?
காதில் தேன்வந்து பாய்ந்ததே!
கருவுற்ற செய்தி கேட்டவுடனே!
பத்து திங்கள் கடந்து,
பட்டுவை காணும் ஆவலோடு,
காத்திருந்தேன்; எதிர்பார்த்திருந்தேன்;
காணக் குரலொன்று,
காதில் கேட்டதே!
ஓடி சென்றேன்;
உவகை கொண்டேன்;
உச்சி முகர்ந்தேன்;
அன்புக்கு பிறந்தவளை,
அழகின் பெட்டகத்தை,
அள்ளியெடுத்து,
முத்தமிட்டு - கூறினேன்
பிறந்தநாள் வாழ்த்து!!!