என் மன வானில்
என் மன வானில் சிறகடித்த பறவை நீ
பலகாேடி விண்மீன்கள் நடுவே
ஔிரும் வெண்ணிலவின் அழகும் நீ
முகில்களாேடு ஔிந்து விளையாடும்
காதல் கன்னி நீ
என் மன வானில் தூறலாய் தாேன்றும்
மழைத் துளி உன் நினைவுகள்
என் மன வானில் நிறம் மாறா வானவில் நீ
ஏழு ஸ்வரங்களாய் ஏழு வர்ணங்களாய்
என் மன வானில் குடியிருக்கும்
என் தேவதை நீ தானே