அந்த ஒரு நாள்

அந்த ஒரு நாள்…
நான் நானாக
உணர்ந்தேன் அந்த ஒரு நாளில்....
மலர்களின் மணத்தை
நுகர்ந்தேன் அந்த ஒரு நாளில்....
மரங்களின் மெளனத்தை
மறந்தேன் அந்த ஒரு நாளில்....
பறவைகளின் சப்தத்தைச் - சற்றே
வியந்தேன் அந்த ஒரு நாளில்.....
நண்பர்களின் நட்பை
நாடினேன் அந்த ஒரு நாளில்....
பெண்களின் ஆழ்மனதை - அறிய
முயன்றேன் அந்த ஒரு நாளில்....
மேசையை மெல்லத்
தடவினேன் அந்த ஒரு நாளில்....
ஆசிரியரின் ஆலோசனைகளை
ஆராய்ந்தேன் அந்த ஒரு நாளில்....
காதலர்களின் காதலைக் - கற்க
முயன்றேன் அந்த ஒரு நாளில்....
கண்களில் வடியும் கண்ணீரையும்
மறந்தேன் அந்த ஒரு நாளில் - ஆம்
கல்லூரியின் கடைசி அந்த ஒரு நாளில்..!!

@சிவபாலகன்

எழுதியவர் : சிவபாலகன் (5-Apr-18, 12:04 am)
Tanglish : antha oru naal
பார்வை : 167

மேலே