எதை கொண்டு அழிப்பேனோ
வான மழை தொட்டு அழிப்பேனோ...வண்ண மலர் இதழ் கிழித்து அழிப்பேனோ....
கடல் நீரை அள்ளி கொண்டு வந்து அழிப்பேனோ...ஊரார் காற்றை இழுத்து வந்து அழுந்த தேய்த்து அழிப்பேனோ....கூர்முனை கத்தி கொண்டு குறுக்கே கீறி அழிப்பேனோ....சுடும் நெருப்பை வாரி கொட்டி அழிப்பேனோ.......அன்பே!.... என் இதயத்தில் துடிக்கும் உன் பெயரை எதை கொண்டு அழிப்பேனோ என் உயிரே.......❤