உயிர் கொல்லி திட்டம்

உயிர் கொல்லி திட்டம்
கால்களை உடைத்தாலும் கைகளால் எழுந்து நிற்க்கிறான்
கைகளை உடைத்தாலும் கால்களால் உணவு உட்கொள்கிறான்
ஊனமானாலும் உயர்ந்து நிற்க்கிறான் இந்தியன் - என்பதால்
இந்தியனின் முதுகெலும்பை உடைக்க நினைக்கிறான் அந்நியன்
முதுகெழும்பின் உயிர் நரம்பை துண்டிக்க நினைக்கிறான் தமிழகத்தில்
பல உயிர் கொல்லி திட்டங்களை கொண்டு...
அறிந்தும் உடைந்த கால்களால் ஏறிமிதித்து உடைந்த கைகளால் திட்டத்தை ஊட்டுகிறது - இந்தியா
- த.சுரேஷ்