நான் தனியாக

உன் கரம் கோர்த்து நடந்த பாதையில்
நான் தனியாக...
கண் சிமிட்டி சிமிட்டி சிரித்தது போய்
இமைக்காமல் அழுகை...
உன் ஆறுதல் மொழியெலாம் அசரீரியாக...
சட்டையை மாற்றிக் கண்ணாடிக்கு பதில் என் முன் நிற்பாயே,
குறை கூறி,
நீ நாளுக்கு நாலு சட்டை மாற்ற சேட்டை செய்வேனே...
வாரக் கடைசியில் நாம் ஊர்வலமிட்டு வந்து
வீட்டில் வாங்கும் திட்டு,
எனக்கே எனக்காய் நீ இட்ட
திட்டங்கள்
இன்றும்
அறங்கேறிக் கொண்டே
உன் பெயரை உச்சரிக்கின்றன....
ஆனால்
நான் மட்டும்...
அனைவரும் கேலி செய்ய,
கல்லறைக்குள் காற்றாடி வைக்கவும், சாளரம் அமைக்கவும்
கேட்டு கேட்டு ஓய்ந்து போகின்றேன்...
தினமும் கல்லறையில் தண்ணீர் ஊற்ற வந்து
நம் அன்னையின் கண்ணீரோடு கரம்க கோர்த்து கறையிலேயே நிற்கிறேன்...
விசிறி கொண்டு விசிறினால் வழக்கம் போல் நீ செய்யும் கேலி ஒலிகள்,
மயானத்திலிலும்
மாயமாய் ஒலிக்கின்றன...
போலி மனிதர்களிடம் காளி போல் கத்துகிறேன்
நீ வெயில் தாங்க மாட்டாயே
என் அன்பு சின்னா.....!!!
வந்திடு அண்ணா....
அந்த முழுதும் மூடப்பட்ட மணற்குவியலிலிருந்து.....

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (10-Apr-18, 7:42 am)
Tanglish : naan thaniyaaga
பார்வை : 283

மேலே