பத்தின் அடுக்கு பத்தாக
அவன் கருங்கூந்தலை என் கைவிரல்கள் கோதிக்கொண்டிருக்க
அவனோ என் மடியில் சாய்ந்திருக்க
வானமோ சாயங்கால
நேரங்காட்ட
சந்திரனோ வெளி வர
காத்திருக்க
என் விழியோ அவனையே பார்த்திருக்க......
அப்போது நகரும்
நொடிகள்
ஒவ்வொன்றிற்க்கும்
உன்மேல்
பத்தின் அடுக்கு பத்தாக
என்னில் ஆசைகள் கூடுதடா.....