இயற்கை அழிவு
கண்மூட கண்ணாம்பூச்சியாட்டமாம்
கண்ணீர் மழ்க கன்னியரின் மோகமாம்
கதறல் மிஞ்சியதே
மானிடா உன் சுகபோக வாழ்க்கையில்
பிரம்மன் படைப்பு சாபத்தில் திணறுமே
பிச்சைஅவலம் பிறப்பில் திலைக்குதே
மதிக்கெட்ட மானிடன்
மண்ணை கொன்று ஆள்வது சாபமே
புன்னகைக்கு ஏங்கும் சிசு
பூபந்தலில் சிதறிக்கிடைக்கயில்
பரிகொடுத்த நெஞ்சங்கள்
பார்க்கையில் உடைந்ததே என் ஜீவன் இன்று
சிறகுடைந்து நிற்கிறாய்
சீர்த்தூக்க மனம் வந்தாலும்
மதியால் கெட்டகுலத்தில்
மயிரலவும் மன்றாடினாலும்
மன்னிக்க மனம் எழவில்லையே மானிடா