இது தான் காதலா

இலைகளிலே
பனித்துளி போல்
கூடாததோ காதல் ..
மடமையின்
பிடிக்குள் மனதை
மயக்குவதோ காதல் ..
விரல்களினால்
விடையம் பேசி
மயிர்க்கால்களை
தூக்குவதோ காதல் ...
பிரிவென்னும்
வலி தந்து
பிரியாவிடை
அரங்கேற்றுவதோ காதல் ..
இல்லை..!!
கவலை கடப்பதற்கும்
சிறகை விரிப்பதற்கும்
உலகை அளப்பதற்கும்
உவகை கலப்பதற்கு
உன்னை தேடி
தன்னை
தொலைப்பதே
காதல் ......!!!