அன்பை உணர்தலே உண்மை
" லொள் லொள் ",என்ற பாஷை புரிகிறதா?
புரியவில்லையா?
இதோ உங்களுக்காக தமிழாக்கம் செய்கிறேன்.
" எங்கே போனாய் தம்பி? என்னிடம் சொல்லாமல் எங்கே போனாய் தம்பி? ". என்று கேட்கிறார் நாய் உருவில் இருக்கும் என் அன்பு சகோதரி.
" நண்பர்களுடன் விளையாட போனேன் அக்கா. ",என்று நானும் பதில் கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தேன்.
உணர்ச்சிகளை புரிந்து கொண்டால் மொழி கற்க வேண்டியதில்லை.
அன்புக்கு மொழியே இல்லை.
ஆதலால் அகிலத்தில் அன்பே சிறந்த உணர்வாய் ஆட்சி செய்கிறது.
அன்பே கடவுள்.
உருவங்களெல்லாம் மாயை.
உணர்தலே உண்மை.
அன்பை உணர்தலே உண்மை...