உயிர் உதித்த நாள்

உன் உயிர் இவ்வுலகில் உதித்த
இந்த நாள்,
நீ எடுப்பாய் ஓர் முடிவு,
ஓருயிரும் மனதின்பம் உதிர்க்கா
நிலையுறு,ஒவ்வோர் ஜீவனின்
மனதிரு,
உறவுகளுக்கு தெரிந்த உன் ஜனன
தினம், உலகறியும் நிலை நடந்திரு,
உயிர் கொடுத்தோர் தலையில் மகுடம் ஏற்றிய
மகவென மகராசனாய் என்றும் வாழிய நீயே!!🌷🌷🌷

எழுதியவர் : பாலமுருகன் பாபு (23-Apr-18, 3:52 pm)
Tanglish : uyir uthitha naal
பார்வை : 834

மேலே