211 பழி குலத்தாழ்வினும் களவு பேரிழிவே – களவு 6
கலித்துறை
மா விளம் விளம் விளம் மா
தள்ள ரும்பெரும் பழியுளார் என்னினுந் தரையில்
எள்ளல் சோழிகு லத்தரே என்னினும் ஏசிக்
கள்ளர் என்றவர்ப் பழித்திடப் பொறாரெனிற் களவிற்(கு)
உள்ள பேரவ மானத்தை உரைப்பதென் னுளமே. 6 களவு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”நீக்கமுடியாத பெரும்பழி உடையவரானாலும், இப்பூமியில் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவரே ஆனாலும் தங்களைக் கள்வர் எனப் பிறர் திட்டிப் பழி சொல்ல மனம் பொறுக்க மாட்டார்.
அதனால் கள்வர் என்ற களவுப் பட்டத்தால் உண்டாகும் பெருத்த அவமானத்தை எவ்வளவு என்று என் உள்ளத்தால் எப்படிச் சொல்வேன்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அவமானம் - பெருமையின்மை; இழிவு.