தண்ணீர்

அம்மா தண்ணீ மொண்டு வா.
இந்தாப்பா..
என்னங்க தண்ணீ ஊர்ல எங்கயும் இல்லை.
பணத்துக்கு வாங்கிட்டு வரேன்டி.
அத குப்பையில போடுங்க...
எங்கேயும் கிடைக்காது... கிடையாது....
தண்ணீ இல்லாம எந்த வேலையும் ஓட மாட்டேங்குது...
சாப்பாடு செய்யல
குளிக்கல... துணி துவைக்கல....குடிக்கவே தண்ணீர் இல்லையே...
அதுவும் சரி தான்...
நீர் இன்றி அமையாது உலகு...
கோடி கோடியா பணம் தங்கம் வைரம் வச்சியிருக்கறது முக்கியமில்லை...இந்த உலகத்துல எல்லாருக்கும் தேவையானது நீர்...
என்று பேசியபடி சமையல் அறையில்
ஒரு டம்ளர் தண்ணீரை மொண்டு கையில் வைத்துக் கொண்டு கதறி அழுதாள்.குடிப்பதற்காக கையை உயரே கொண்டு சென்றாள்.
பிரபா ஒரு கிளாஸ் தண்ணீ எடுத்துட்டு வாம்மா...என்று அவள் கணவரின் குரல் கேட்டு
குடிக்காமல் அந்நீரை அவரிடம் கொண்டு சென்றாள்.
அவர் நீரை வாங்கி குடித்து விட்டு டம்ளரை கீழே வைத்தார்.
அவள் பிள்ளைகளின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
சிறு வயதில் தான் ஆற்றில் ஆட்டம் போட்டதெல்லாம் கண்ணில் வந்து நிற்க
கண் மூடினாள்.
சரிந்து அவள் மகளின் மடியில் விழுந்தாள்.

அவுட்டே ...செத்துட்டா...ஜாலி...
ஏய் கொடுடி ...
என்று கைபேசியை மகளிடமிருந்து மகன் பெற்றான்...

அம்மா......அம்மா....
அப்பா அம்மா....
பிரபா.....பிரபா...
தண்ணீ எடுத்துட்டு வாடா...
அப்பா தண்ணீ இல்ல...
பக்கத்து வீட்ல போய் வாங்கிட்டு வா...
அத்த ஒரு கிளாஸ் தண்ணீ தாங்க அத்தை
அம்மா மயங்கிட்டாங்க அத்த....
எங்க வீட்லயே
தண்ணீ இல்ல போப்பா...
அத்த ஒரே ஒரு பாலாடையிலயாவது தண்ணீ தாங்க அத்த...
உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்கறன் அத்த...
மனம் சற்றும் கரையவில்லை...
அதற்கு அடுத்த வீட்டில் அதற்கு அடுத்த வீட்டில் என்று எதிர் வீடு மாடி வீடு கூரை வீடு என்று எல்லா வீட்டிலும் கேட்டான்.
எங்கேயும் யாரும் கொடுக்கவில்லை.
இங்கே அவரின் கண்ணீர் பட்டு கண் விழித்தாள். மகளின் தலையை வருடி
பிள்ளை எங்கே என்று கேட்டாள்.
வெளியே நீர் வாங்கி வரச் சொல்லி அனுப்பி இருக்கேன்.
ஏங்க யாரும் தரமாட்டாங்க....
பிள்ளை பாவங்க...
போய் கூப்டு வாங்க...
என் பிள்ளைக்கு இந்த நிலைமை வேண்டாங்க...
அவனே ஓடி வந்து அம்மா என்று கட்டி பிடித்துக் கொண்டான்.
அம்மா நான் ஊர் முழுக்க கேட்டமா யாருமே தண்ணீ தரல.
அத்தைக்கு நீங்க ஒரு சொம்பு தண்ணீ கொடுத்தீங்க...
ஒரு பாலாடை தண்ணீயாவது தாங்க என்று கால்ல விழுந்து கேட்டன் அத்த தரலமா.
காலில் விழுந்தான் என்று கேட்டவுடன் அவள் கண்ணில் இருந்து ரத்தம் வடிந்தது.
தன் இரு பிள்ளையையும் மடியில் வைத்துக் கொண்டு
அவர்கள் மீது எந்த தவறும் இல்லை.
அவர்களுக்கும் நீர் அவசியமல்லவா...
நாம் தண்ணீரை சேமிப்போமா...
சரிமா...
தன் கணவரின் கையை தட்டிக் கொடுத்து கண்ணீரை துடைத்து விட்டு...
நீங்க குடிச்ச தண்ணீ எப்படி இருந்தது.
உப்பு கரிச்சதுடி.
ம்ம் கரிச்சிருக்கும் கரிச்சிருக்கும்...
ஏன்னா அதுல என் கண்ணீர் சிந்திடுச்சு.....
கடல் நீர தான் இனி குடிக்கணும்...போல...
பச்ச தண்ணீர் பல்லுல பட்டு பல நாள் ஆக
என்னங்க ...என்று சொல்லியபடி...
தண்ணீ தண்ணீ என்று
அவளையும் மீறி அந்த தாகம் கேட்கிறது. நொடியில்
விரைவாக எழுந்து அறைக்கு செல்ல பின்னால் கணவன் பிள்ளைகள் ஓடி வருகிறார்கள்.
கதவை தாழிட்டு
அலமாரியில் இருந்து கூரை புடவையை எடுத்து நெஞ்சோடு கட்டியணைத்துக் கொண்டாள்.

தன் கணவனையும் தன்னையும் இணைத்து வைத்த கூரை புடவையை...
தன் கணவனுக்கு போர்வையாகிய அக்கூரைப் புடவையை...
தன் பிள்ளைகளுக்கு
ஆனை(ஊஞ்சல்) கட்டி
தூங்க வைத்த கூரப் புடவையை...
தன் மார்பிலும் தோளிலும் தாங்கிக் கொண்ட அக்கூரைச் சேலையை...
தன் பிள்ளைகளின் போர்வையாகிய கூரை புடவையை எடுத்து
எப்படி தூக்கு போட வேண்டும் என்று கூட தெரியாத அவள்
தன் கழுத்தில் இறுக்கி சுற்றி இறுக்கமாக அவிழ்க்க முடியா மூன்று முடிச்சை போட்டாள்.
கதவு சுக்கு நூறாக உடைகிறது...
பிரபா...அம்மா...அம்மா
என்ற குரல்கள் காதில் விழும் சத்தம் குறைகிறது...
மூச்சு விட முடியவில்லை...
மூன்று பேரும் கதவை உடைத்து உள்ளே வந்து விட்டார்கள்.
மூன்று பேரையும் கடைசியாக ஒருமுறை பார்த்தபடி இறந்துவிட்டாள்...

பிரபா...
அம்மா...அம்மா...
மடியில் கிடத்தி அழுகிறார்கள்...
கடைசி நீராய் கண்ணீர் தான் மிஞ்சியது...

~ பிரபாவதி வீரமுத்து
#தண்ணீர்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Apr-18, 6:27 pm)
Tanglish : thanneer
பார்வை : 1133

மேலே