மகளிரின் நட்பு

பல ஆண்டுகள் இடைவெளியில்
உன் குரலோசை கேட்டேன் - மெல்லிசையாய்
அழுதிட துடித்தேன்
ஆட்கள் ஏராளம்
துள்ளி திருந்தது ஒரு காலம்
துவண்டு நிற்பது ஒரு காலம்
இனி வராதோ பள்ளி / கல்லூரி காலம்
என ஏங்கியது பல காலம்
ஒவ்வொருவராய் தேடி பிடித்தேன்
தொலை பேசியில்
விழியில் வழிகிறது கண்ணீர்
தோழிகளை கட்டியணைத்து பேச -
இயலவில்லை
மனம் விட்டு பேச ஆளில்லையடி தோழி
மனதின் வலி, விழியின் வழி
தெரிவதில்லை - இங்குள்ளோருக்கு
என்ன ஆனாலும்
சொந்தம் ஆச்சே
தூக்கி எரிந்து வர இயலாது
உனக்கும் எனக்கும்
ஆறுதலாய்
தினம்
தினம்
சிறு சிறு பேச்சுகளில் மீதி வாழ்க்கை...!!!
இது போதுமடி
நட்பின் வாசமே
அகத்தில் அழுகை
புறத்தில் புன்னகை
மகளிர் நட்பின் ஆழம் புரிவதில்லை இப்பூவுலகில்...!!!
நமக்கென்று ஒரு மனது
நமக்கென்று ஒரு எண்ணம் - என்கிற சூழல்
எதிர்கால சந்ததிக்காவது கிடைக்கட்டும்...!!!