சிரிப்பில் என்னை இழந்தேன்
அவன் சிரிக்க
நான் சிரித்தேன்
இருவரும் சிரித்தோம்
சேர்ந்தோம் இணைந்தோம்
அவன் சிரிக்க ஏன் சிரித்தேன்
என்று இப்போது எண்ணுகின்றேன்
என் முகத்தில் இப்போதெல்லாம்
சிரிப்பில்லை எனக்கு
சிரிக்கத்தெரியவில்லை -அவன் தந்த
ஏமாற்றத்தில் சிரிப்பை அழித்த
புற்று நோய் போல் ஏமாற்றத்தின்
வலிகள் என் மனதில் முகத்தில்
சிரிப்பு காணாமல் போனது
முற்றத்தில் சுற்றிவந்த
சிட்டுக்குருவிபோல்.