யார் ஊனம்

ஊனமான உத்தமர்கள்
உழைத்துப் பிழைக்கும்போதும்,
உறுப்பெல்லாம்
உறுதியாயுள்ள மனிதன்
உன்மத்தனாய்
உறங்கும்போதும்,
உங்களுக்குத் தெரிகிறதா-
உண்மையில் யார்
ஊனம் என்பது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-May-18, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே