வாழ்த்தும் விளக்கு

குத்து விளக்கின் ஒளியினிலே
கல்வி கற்ற பெரியோர்முன்,
குத்து விளக்காம் மணமகளின்
குடும்பம் போற்றும் மணவிழாவில்,
தத்துவப் பொருளாய் ஒளிதந்திடும்
தன்மை கொண்ட விளக்கதுவும்,
நித்தம் வாழ மணமக்களை
நிறைவாய் வாழ்த்திடும் பந்தலிலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-May-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vazhthum vilakku
பார்வை : 68

மேலே