அக்கினியாய் துணிந்திடு

பெண் சமுதாயமே இனியாவது துணிந்திடு...

இன்றைய நிலை கண்டாவது துணிந்திடு...

சமூக அநீதிகளை அடியோடு அறுத்தெறிந்திட துணிந்திடு...

குற்ற செயல்களை குழி தோண்டி புதைத்திட துணிந்திடு...

உன் பாதுகாப்பு வேண்டி நீயே துணிந்திடு...

போராட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ துணிந்திடு...

உன் உரிமையை நிலைநாட்டிட உடனே துணிந்திடு...

அளவில்லா ஆற்றல் பெற அன்போடு துணிந்திடு...

சமுதாயம் மேன்மை பெற புயலாய் துணிந்திடு...

கண்ணியம் காத்திட காவியமாய் துணிந்திடு...

பெண்ணியம் போற்றிட பெருமையோடு துணிந்திடு...

இன்னொரு ஆசிபாவை இழக்காத வகையில் துணிந்திடு...

உன் இலட்சிய பாதையில் பயணித்திட துணிந்திடு...

அகிம்சை வழியில் போராட அக்னியாய் துணிந்திடு...

பெண்ணே இனியாவது விழித்திடு !

பெண்ணே நீயும் துணிந்திடு !!

என்றென்றும் வரலாறு படைத்திடு !!!

எழுதியவர் : சி.முத்தரசு., செங்கோட்டை த (7-May-18, 3:06 pm)
சேர்த்தது : முத்தரசு சிவா
பார்வை : 66

மேலே