காதல் பூ மழை

மரங்களெல்லாம் ,
தலையசைக்கும்
என்னவனின் வார்த்தைக்கு....

பூக்களெல்லாம் ,
பாதையாகும்
என்னவனின் பாதம் பட.....

இயற்கையும் இசைப்பாடும்,
என்னவனின் மனதில்
இடம் பிடிக்க....

தென்றலும் ; திங்களும்
மதிமயங்கும்,
என்னவனின் ,
திருமுகம் கண்டு...

நதிகளும் கடலலைலென
ஓடிவரும்...
என்னவனைப் பார்க்க...

கதிரவனும் காத்திருப்பான்,
என்னவனின் வருகைக்கு..

விழிகளெல்லாம்
வியந்துப்பார்க்கும்...
என்னவனின் விழியினை.....

மொழிகளெல்லாம்
ஏங்கிநிற்கும்...
என்னவனின் மொழிக்கேட்க....

மழையும் பூவாகும்..
அவனைத் தொட்டுச் செல்ல....

தன் பெயரால் உலகை
அடிமை செய்தவன்....
அவனே....காதல்....
என் காதலன்....

அவன் காதலால்
என் காயம் மறந்தேன்...
என் காலம் முழுவதும்
அவன் காதலுக்காக வாழ்வேன்!!!

எழுதியவர் : பானுமதி.மா. (9-May-18, 11:36 am)
சேர்த்தது : மதி
Tanglish : kaadhal poo mazhai
பார்வை : 165

மேலே