மனித நேயம்
துருவங்கள் இரண்டு
ஒரு போதும் சேர்வதில்லை
துருவங்கள் இடையில்
மனிதர் வாழ் கண்டங்கள்
துருவங்களைக் கூட சேர்கின்றன
ஜாதி,மதங்கள் மனிதரை சேர்ப்பதில்லை
ஜாதி மதங்கள் துருவங்கள், ஆயின்
இவற்றிற்கிடையில் இழையும்
மனித நேயம் ஒன்றே
இவற்றை எடுத்தெறிந்து
துருவங்களை இடையிலே
வாழும் மனிதரை சேர்த்துவிடும்.