நீயடி

என் சித்திர வண்ணமே
உன்ன நான் பாராமா
செத்துத்தா போகுற....!

நித்தமும் கண்ணுள
உம்முகம் காட்டுற
கனவுள வாழத்தா
ஏங்குற......!

முத்தமும் வேணாடி
மொத்தமா கேக்குற
கிட்டத்தா வாயேன்டி
மனசுல தாங்குற.....!

எட்டி நீ போகாத
கெட்டு நா போவேன்டி
ஒட்டி நீ நின்னாக்கா
உச்சத்த தாண்டுவ......!

மிதக்குற வானத்த
நீந்துற நிலவையும்
உங்கையில் பொம்மையா
மாத்துவ.....!

கையெடுத்து கும்பிட்ட
நீ எனக்கு கடவுள போலத்தா
காரணம் கேட்டாக்கா
என் காதலி நீயடி.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (10-May-18, 6:28 pm)
பார்வை : 61

மேலே