நாம் பிறந்தது
பூக்கள் மலர்வது வாசத்தை தருவதற்காக
சூரியன் உதிப்பது வெளிச்சத்தை தருவதற்காக
மழை பொழிவது குளிர்ச்சியை தருவதற்காக
காற்று வீசுவது நாம் சுவாசிப்பதற்காக
தாய் பிறந்தது அன்பு காட்டுவதற்காக
தந்தை பிறந்தது பாசத்தை தருவதற்காக
ஆசீரியர்கள் உருவானது நம் அறிவை வளர்ப்பதற்காக
ஆனால் நாம் பிறந்தது எதற்காக ?
இவ்வுலகில் சாதனை படைப்பதற்காக
நம் திறமைகளை வெளிக்கொண்டு வந்து
நாளைய உலகில் நாமும் சாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பெறுவோம் !!!