சிந்தனை மறவா வரமருள் தாயே
வந்தனை செய்யார் வசைநித்தம் பேசுவார்
நிந்தனை செய்தே பொழுதை வீணடிப்பார்
கந்தனை கார்நிற மேனியனை மால்சிவனை
சிந்தனை மறவா வரமருள் தாயே !
-----இயல்பான இறை போற்றும் வரிகள்
வந்தனை செய்யார் வசைநித்தம் பேசுவார்
நிந்தனை செய்தே பொழுதினை வீணடிப்பார்
கந்தனை கார்நிற மேனியனை மால்சிவனை
சிந்தனையில் வைத்தருள்தா யே !
----இறையருள் வரிகள் ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக