குழந்தை மனசுக்காரி
ஒன்றுமே பேசாமல்
அரையும் குறையுமாக
என்னை கொன்றவளை
நான் என்னவென்று
சொல்வேன்
என் செல்லக்
குழந்தை மனசுக்காரி
என்று தான் சொல்லத்
தோன்றும்
அவள் மிச்சம் விட்டு விட்டு
சென்ற உயிரையும்
அவளை தேடி சென்று
கொடுத்து விட்டு
மடிய ஆசை
அவள் மடியில் இல்லை என்றாலும்
அவள் காலடியிலாவது மடிய ஆசை......!