இருவர் நம்பிக்கை மங்கள ஒலி
அன்பே ,என் எண்ணமெல்லாம்
எப்போதும் உன்நினைவில்தான்
நீ யன்றி வாழ்தல் இனி எனக்கில்லை
என்றாள் அவள்,அதற்கவன் உன்நினைவே
இந்நினைவானபின்னே உன்னில் நான்
கலந்துவிட்டேனே நீ அறியாயோ என்றான்
இனி நீ வேறில்லை, நான் வேறில்லை
நம் காதலெனும் உயிர்க்கொண்டு ஈருடல்
ஓருயிராய் வாழ்ந்திடுவோம் வாழ்நாள்
என்றனர் இருவரும் கூடி மங்கள ஒலியாய்
இணைந்தனர் வாழ்வில் மங்கை மணாளனாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
