என் தமிழே
தரம் தாழ்த்தி பேசியவரிடமும் தலைநிமிரச் செய்தாய் புறம் கூறி பழித்தோரிடமும் உணர வைத்தாய் இகல் என்று வந்தோரையும் வாழவைத்தாய் அறவழி என்று நான் இருக்க அறியவைத்தாய் உறவென்று கூற உயர்வு தந்தாய் உயிர்என்று போற்ற என்னை உணர வைத்தாய் இத்தனை செய்த உனக்கு நான் என்ன செய்தேன் இனிவரும் காலங்களில் உமக்கு தொண்டு செய்வேன்