இன்றைய பெண்களை பற்றி என்ன நினைக்குறீங்க
🤔🤗✍️😅😜😜😜😝😝😝😛😛ஒருவர் கேட்டார்," இன்றைய பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?".
"ஒன்னும் நினைக்கலைங்க",என்றேன்.
அவரு விடல. மீண்டும்மீண்டும் கேட்டார்.
தொல்லை தாங்காமல் , " விட்டு கொடுக்க மாட்டாங்க. ",என்று சொல்லிட்டேன்.
" ஏன் அப்படி நினைக்கறிங்க? ",என்று கேட்டார்.
அக்கம்பக்கம் இருந்த பெண்கள் எல்லாம் என்னை முறைக்கவும் மிரட்டவும் " இப்படி மாட்டிவிட்டுட்டிங்களே! ",என்று சொல்ல அவரு சமாளியும்னு விலகிக்கொண்டார்..
இன்றைய பெண்களை பற்றி தானே கேட்டீர்கள்.
அவர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
அன்புன்னு வந்துட்டா அம்மாவை விட்டுகொடுக்க மாட்டாங்க.
பாசம்னு வந்துட்டா அப்பாவை விட்டுகொடுக்க மாட்டாங்க.
சண்டைனு வந்துட்டா அண்ணனுக்கே விட்டுகொடுக்க மாட்டாங்க.
நட்புன்னு வந்துட்டா தோழிகளை விட்டுகொடுக்க மாட்டாங்க.
காதல்னு வந்துட்டாகாதலனை விட்டுகொடுக்க மாட்டாங்க.
இல்லறம்னு வந்துட்டா குடிகார கணவனையும் விட்டுகொடுக்க மாட்டாங்க.
குடிக்க ஆரம்பித்தால் ஆண்களிடம் விட்டுகொடுக்க மாட்டங்க.
மொத்தத்தில் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான். விட்டுகொடுக்க மாட்டோம்.
அது தான் இன்றைய பெண்கள்...
ஐயையோ! அடிக்க வாராங்க. நான் ஓடிவிடுகிறேன்....😝🤐🤐🤐🤐🤐
"