காதல்!!!
விதவிதமாய் தலைவாரினேன்!
மலர் மலராய்
சூடினேன்!
கலர் கலராய்
பொட்டு வைத்தேன்!
பல வண்ண சுடிதாரும் சேலையும் உடுத்தினேன்!
எனதழகை கண்ணாடியில் இரசித்தேன்!
உணவுகளை அளவாய் சுவைத்தேன்!
உறங்கினேன் கனவில் நீ வருவாய் என!
கிறங்கினேன் உன் கண் சாடையில்!
மயங்கினேன் மன்னவனின் காதல் பரிவர்த்தனையில்!
அன்பே! இவையாவும் செய்தேன் நீ என் வாழ்வில் வந்த பிறகு!!!
தலைவாரினேன் சிக்கு உடையவில்லை!
மலர் சூடினேன் வாசம் இல்லை!
பொட்டு வைத்தேன் கலரில்லை!
சுடிதார் சேலை உடுத்தினேன் வண்ணமில்லை!
கண்ணாடி பார்த்தேன் தெரிவது நானே இல்லை!
உண்டேன் அளவும் தெரியவில்லை சுவையும் தெரியவில்லை!
உறங்கவே இல்லை கனவில் நீ வருவாய் என!
கிறங்கினேன் தனிமையில் உன் கண் சாடை இல்லை!
மயங்கினேன் மன்னவனின் காதல் நினைவில்!
வாழ்வுக்கும் சாவுக்குமான பரிவர்த்தனையில் உந்தன் நினைவுளோடு....நான் வாழ்கிறேன்
அன்பே! இவை யாவும் நிகழ்கிறது நீ என்னைப் பிரிந்த பிறகு!!!....
காதல் சேர்ந்தாலும் சுகம் பிரிந்தாலும் சுகம்!!!.....