ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
முத்து எடுக்கும் நகரில்
உயிர்களை எடுத்து விட்டனர்
மூடர் கூட்டம் !
முடக்கலாம் இணையத்தை
முடக்க முடியாது
இன உணர்வை !
மூச்சு விட சிரமம் என்றவர்களின்
மூச்சை நிறுத்தின
துப்பாக்கிக்குண்டுகள் !
ஆந்திராவில் சுட்டான்
தமிழகத்திலும் சுடுகின்றனர்
தமிழர்களை !
முழங்காலுக்குக் கீழ் சுடவேண்டும்
என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு
நெஞ்சில் சுட்டான் கொடூரன் !
மிக மிக மலிவானது
இந்த உலகில்
தமிழன் உயிர்
வெளிநாட்டு கோடீசுவரனுக்காக
உள்நாட்டு ஏழைகளின்
உயிர் பறிப்பு !
செருப்பால் அடித்து விட்டு வெல்லம்
கொன்றுவிட்டு
பத்து லட்சம் !
சுடுவதற்கு ஆணை வழங்கிய
சும்பனை தூக்கிலிடுங்கள்
விசாரணையின்றி !
காக்கை குருவிகளைக் கூட
சுடுவது குற்றம்
மனிதர்களைச் சுடுகின்றனர் !
மீண்டு வந்தது
மீண்டும் வந்தது
காவல்துறைக்கு அவமானம் !
அயல்நாட்டுக்காரனுக்காக
சொந்தநாட்டு மக்களின்
உயிர் பறித்த சுயநலவாதிகள்!
வெற்றி ! வெற்றி !வெற்றி !
தமிழர்களுக்கு வெற்றி
சல்லிக்கட்டு போலவே !