சாதனை

கருவறையில் பத்துமாதம் சுமந்து பத்திரமாய் என்னை பெற்றவள் செய்தால் சாதனை.....

மழலையாய் தரை தொட்டு கிடந்தேன் குப்பற சாயலில் நானே கையூண்டி தவழ்ந்தேன்.....அது என் முதல் சாதனை........

ஒன்றும் தெரியாதவனாய் ஒன்னாம் வகுப்பில் போய் அமர்ந்தேன் எனக்கு அங்கே அறிவை வளர்த்த என் முதல் ஆசிரியர் செய்ததும் சாதனை....

சாதனை
சாதிக்கிறவர்க்கு
தோழன்.......

சாதனை
முயல்கிறவனுக்கு
கிடைக்கும் பொக்கிஷம்....

உனை உலகம் அறிய செய்வது
சாதனை......

சோதனைகளை
அடித்து விரட்டும் வீரமகன்
தான் சாதனை.......

சாதனை செய்வோம் சரித்திரம் படைப்போம்....
கவிஞர் மா.ரமேஷ்பாரதி

எழுதியவர் : poetrameshbharthi (3-Jun-18, 9:01 am)
சேர்த்தது : poetrameshbharthi
Tanglish : saathanai
பார்வை : 213

சிறந்த கவிதைகள்

மேலே