போ

போ...
காலம் பதில்சொல்லும் என கடந்து போ...
திரியும் நாவொலிகளுக்கு செவிமெடுக்காதே போ...
அலட்சிய பார்வைகளை கண்டும் காணாதே போ...
கற்பனைக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்காதே போ...
இழந்ததை எண்ணி வருந்தாதே போ...
உன் பூஜ்ஜியத்தில் புத்திசொல்ல கூட்டம் வரும் கலங்காதே போ...
சுமத்தப்படும் குற்றங்களுக்கு பலியாகாதே போ...
எல்லாமே மாறும் என்பதால் உன் பாதையில் நீ போ...
உள்ளத்தில் உறுதியுண்டு உயர்வாய் நீ போ...