விழச்செய்தவள் நீ

அழகு!

பனி படர்ந்த மலைகளிலும்
பசுமை நிறைந்த காடுகளிலும்
மலர்கள் மலர்ந்த
தோட்டங்களிலும்
கண்டிருக்கிறேன்
உன்னிடம்தான் அதிசயித்திருக்கிறேன்!

வெய்யில்

உனக்கு குடையைத் தரும்!
எனக்கு குளிரைத் தரும்

மழை!

நீ நனைவதால்
நான்
கரைகிறேன்!

பகல்!

உன்னைக்
காண்பதில்
கழியும்!

இரவு!

உன்னை
நினைப்பதில்
விடியும்!

காதல்

மூன்றெழுத்து குழி
விழுந்தவன் நான்
விழச் செய்தவள் நீ

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (6-Jun-18, 1:00 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 489

சிறந்த கவிதைகள்

மேலே