உயிரே உயிர்பெற்று வா

என் வலி நீக்கும்,
வழி நீயோ!

நான் உயிர் வாழ,
வளி நீயோ!

விழியோரம் வழியுதே,
வலிக்கும் ஈரம்;

அழிக்க முயல்வாயோ? - மேலும்
அளிக்க முயல்வாயோ?

உளிகொண்டு செதுக்கியதோ?
உயிரொன்று இல்லையோ?

உணர்வை உணர்வாயோ?
வழிநீரை துடைப்பாயோ?

நின் பெயரை துடித்த,
என் பூவான இதயம்,

இரும்பென மாறியதே!
கரும்பாறையாய் இறுகியதே!

கல்லாகிய என் கண்ணே,
உயிர் பெற்று வா!
உணர்வுற்று வா!
வலி நீக்க வா!
என் வளியாக வா!

எழுதியவர் : மா செந்தில் லோகு (5-Jun-18, 11:05 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 237

மேலே