வில் ஒரு காவியம் வில் ஒரு கவிதை


வில் ஒடித்து
சீதையை
மணம் முடித்தான்
ராமன்

புருவ வில்லில்
கணை தொடுத்து
என்னைக் கரம்
பிடித்தாய் நீ

அது காவியம்
இது கவிதை

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-11, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 387

மேலே