என்னடி சொல்லப்போற
என்னடி செல்லப்போற??
என் எண்ணமெல்லாம் நீதாண்டி, உன் பார்வைபட காத்திருக்கேன்...
என் மனசெல்லாம் நீ நெறஞ்சிருக்க, உன் தரிசனத்தை தேடுறண்டி...
அழகுக்கு அர்த்தத்தை எங்கெங்கேயோ தேடிப் பார்த்தேன், உன் பேரு மட்டுந்தான் தேறுச்சுடி...
உன் குரலைக் கேட்கையில, இசை எல்லாம் தோத்துருச்சிடி...
உன் கண்ணை பாத்த பின்னே, கிறங்கித்தான் போனனேடி....
உன் கோப சூட்டுக்கு முன்ன, சுட்டெரிக்கும் வெயிலே தேவலாம்டி...
என் கற்பனையில என்னென்னவோ நினைச்சிருந்தேன், உன் பிடிவாத குணத்தால கலங்கிப்போய் நிக்கிறண்டி...
எல்லையே இல்லாம, உன்மேல் அம்புட்டு காதல் வச்சிருக்கேண்டி...
உன்கூட பேசறதுக்கு, நான் நாள் பூரா காத்திருக்கேண்டி...
தேவதையின் முகவரிய கடவுள்கிட்ட கேட்டுப்பாத்தேன், அவரு உன்னோட முகவரி கொடுத்துட்டுப் போனாருடி...
என் உசுருக்குள்ள உன்ன தச்சு வச்சிருக்கேன், நீ விலகிப் போகையில என் உசுர தச்ச வலி பாடாப்படுத்துதடி...
என்னோட வாழ்க்கையெல்லாம் உன்கூட வாழணும்னு, வைராக்கியத்த என்கூட துணைக்குத்தான் வச்சிருக்கேண்டி...
என்னவளே நீ எனக்குதாண்டி...